காதலை இன்ஸ்டாவில் பகிரங்கப்படுத்திய நடிகை…! S.J.சூர்யா டிவிட்டால் உஷார்

வாலி, குஷி, நியூ என இளைஞர்களை குறிவைத்து படங்களை இயக்கிய எஸ்‌ஜே சூர்யா தற்போது கதாநாயகனாக நடித்து வருகிறார். அண்மையில் நடிகை பிரியா பவானி சங்கர் உடன் ஜோடியாக நடித்த எஸ் ஜே சூர்யாவின் மான்ஸ்டர் படம் வெற்றி பெற்றதால் மீண்டும் இருவரும் பொம்மை என்ற படத்தில் இணைந்து நடித்து வருகின்றனர்.

 

இந்த நிலையில் பல ஆண்டுகளாக தனக்கு ராசியான நடிகை சிம்ரன் என்று கூறிவந்த எஸ் ஜே சூர்யா, தற்போது பிரியா பவானி சங்கரை ராசியான நடிகை என புகழ்ந்து டுவிட்டரில் பதிவிட்டு வருகிறார். பொம்மை படத்தில் தன்னுடன் ப்ரியா பவானி சங்கர் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு சிம்ரன் கொஞ்சம், திரிஷா கொஞ்சம் என்று டுவிட்டரில் வர்ணித்திருந்தார்.

 

தொடர்ச்சியாக இரு படங்களில் ஜோடி, டுவிட்டரில் வர்ணனை இவையெல்லாம் பார்த்த சினிமா உலகினர் இருவரும் காதலித்து வருவதாக கொளுத்திப் போட அதிர்ச்சியடைந்தார் பிரியா பவானி சங்கர். காதல் கிசுகிசுவில் டுவிட்டரில் மறுப்பு தெரிவித்தார் எஸ் ஜே சூர்யா. அதில் தான் பிரியா பவானி சங்கரிடம் காதலை தெரிவித்ததாகவும் அதற்கு அவர் தன்னை நிராகரிப்பதாகவும் சிலர் ஆதாரமற்ற தகவல்களை வெளியிட்டு வருவதாக கூறியிருந்தார்.

பிரியா பவானி சங்கர் திறமையான நடிகை. எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய இதுபோன்ற தகவலை பரப்பாதீர்கள் என்று தெரிவித்திருந்தார் எஸ்ஜே சூர்யா. இந்தநிலையில் துபாய்க்கு சுற்றுலா சென்றுள்ளார் ப்ரியா பவானி சங்கர் தனக்கு ஏற்கனவே கல்லூரி காதலன் இருப்பதை உறுதிப்படுத்தி இன்ஸ்டாகிராமில் கவிதை ஒன்றை பதிவு செய்துள்ளார்.

 

அதில் பத்து வருடத்திற்கு முன்பாக கல்லூரியில் சராசரி அழகுடன் இருக்கும் போதே தன் மீது காதல் கொண்டதெரிவித்தவன் அவன் என்றும் தற்போது புதிதாக இருக்கும் தன்னுடன் அதை அன்பு மாறாமல் இருப்பது ஆச்சரியத்தை ஆழ்த்துகிறது சிதைந்து போனறவற்றை மனமுடைந்த ஒருவன் தேர்ந்தெடுப்பது என்பது எளிதான விஷயமல்ல என்று ஆச்சரியத்துடன் குறிப்பிட்டுள்ளார் பிரியா பவானி சங்கர்.


Leave a Reply