அன்னூர் அருகே குடியரசு தினத்தை ஒட்டி உள்ளூர் இளைஞர்கள் மற்றும் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் சார்பில் மாட்டு வண்டிகளின் ரேக்ளா போட்டி !!!

கோவை மாவட்டம் அன்னூர் அருகே கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் குடியரசு தினத்தை முன்னிட்டு கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் உள்ளூர் இளைஞர்கள் சார்பில் மாட்டு வண்டிகளின் ரேக்ளா பந்தயம் நடைபெற்றது. பெரியபுத்தூர் செல்லாண்டியம்மன் கோவிலில் இருந்து கெம்பநாயக்கன்பாளையம் கிராமம் வரை ஐந்து கிலோமீட்டர் தொலைவிற்கு நடத்தப்பட்ட இப்போட்டியில் 30க்கும் மேற்பட்ட இரட்டை மாட்டு வண்டிகள் கலந்து கொண்டன.

 

பெரியமாடு ,சிறியமாடு என இரு பிரிவுகளாக நடத்தப்பட்ட இப்போட்டியில் சுமார் 15 க்கும் மேற்பட்ட மாட்டு வண்டிகளும்,வண்டிக்கு இருவர் என 50க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள் கலந்து கொண்டனர்.

 

உள்ளூர் இளைஞர்கள் மிகுந்த உற்சாகத்தோடு கலந்துகொண்டு காளைகள் போட்டிப்போட்டு கொண்டு ஒன்றுக்கொன்று முந்தி செல்ல சீறிபாய்ந்ததை கண்டு களித்தனர்.

விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த போட்டியில் சிறிய காளை பிரிவில் விளவை பகுதியை சார்ந்த விஸ்வா,சுரேஸ் ஆகியோரும், பெரிய காளை பிரிவில் கோவில்பாளையம் பகுதியை சார்ந்த முத்துக்குமாரும் வெற்றி பெற்றனர். போட்டியில் வெற்றி வாகை சூடியவர்களுக்கு கிராம மக்கள் சார்பிலும், கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் சார்பிலும் பரிசு கோப்பைகளும், பணமுடிப்பும் வழங்கப்பட்டன.


Leave a Reply