வியட்நாம் நாட்டில் சாலையில் பைக்கில் சென்ற இருவர் தலையில் தண்ணீர் ஊற்றி குளித்து கொண்டே பயணம் செய்த வீடியோ வைரலாகி வருகிறது. குயின்டன் கான் என்ற நபரும் மற்றொரு நபரும் பைக்கில் பயணம் செய்தனர்.
மேலாடையின்று பைக்கில் வலம் வந்த அவர்கள் தாங்கள் வைத்திருந்த வாளியில் இருந்து தண்ணீர் எடுத்து தங்களது உடலில் ஊற்றி குளியல் அறையில் குளிப்பதை போல சோப்பு போட்டுக் குளித்தனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலானதை அடுத்து போக்குவரத்து விதிகளை மீறியதாக இருவருக்கும் தலா ஆயிரத்து 600 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.