சவுதி அரேபியாவிற்கு சென்ற கேரள மாநிலத்தை சேர்ந்த செவிலியர் ஒருவருக்கு கொரானா வைரஸ் பாதிப்பு உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. அந்த நாட்டிலுள்ள அல்கைத் மருத்துவமனையில் பணியாற்றும் செவிலியர்கள் 30 பேருக்கு மருத்துவ பரிசோதனை நடத்தப்பட்டது.
இதில் ஒருவருக்கு கொரானா வைரஸ் தொற்று இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. நோயாளி ஒருவருக்கு சிகிச்சை அளித்த போது அந்த செவிலியருக்கு நோய் தொற்று ஏற்பட்டது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. மேலும் 100 செவிலியர்களுக்கு மருத்துவ பரிசோதனை செய்யப்பட்டுள்ளது.
சவுதி அரேபியாவில் பாதிக்கப்பட்டுள்ள கேரள செவிலியருக்கு உரிய சிகிச்சை அளிக்க நடவடிக்கை எடுக்குமாறு வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு கேரள மாநில முதலமைச்சர் பினராய் விஜயன் கடிதம் எழுதியுள்ளார்.