‘சிறார்களிடம் இருந்து சக்தியும், ஊக்கமும் பெறுகிறேன்’ – தேசிய பிரதமர் மோடி உரை

பல்வேறு பிரிவுகளின் கீழ் தேசிய விருது பெற்ற சிறுவர்களை சந்தித்த பிரதமர் மோடி அவர்களை பாராட்டியதோடு அவர்களிடம் இருந்து ஊக்கத்தையும், சக்தியும் பெறுவதாக தெரிவித்தார். விருது பெற்ற சிறுவர்களை நரேந்திர மோடி தன்னுடைய வீட்டில் சந்தித்து கலந்துரையாடினார்.

 

சிறுவர்கள் ஒவ்வொருவரும் மிகக்குறைந்த வயதில் செய்துள்ள சாதனைகள் தம்மை வியக்க வைப்பதாக பிரதமர் குறிப்பிட்டார். தண்ணீரையும், பல ரசத்தையும் பருகும் படியும் எப்போதும் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் படியும் அவர்களை அறிவுறுத்தினார்.

 

புதுமையை புகுத்துதல், சமூகசேவை, கல்வி, விளையாட்டு, கலை, கலாச்சாரம் உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் 18 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கு விருது வழங்கப்படுகிறது. இந்த விருது ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பரிசு மற்றும் சான்றிதழை உள்ளடக்கியது.


Leave a Reply