குடியுரிமை சட்டத்திற்கு எதிராக திரிணாமுல் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் பங்கேற்றார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மத்திய அரசுக்கு எதிராக ப.சிதம்பரம் உள்ளிட்டோர் முழக்கங்கள் எழுப்பினர்.
அண்மையில் காங்கிரஸ் தலைமையில் நடைபெற்ற எதிர்க்கட்சிகள் கூட்டத்தை திரிணாமுல் காங்கிரஸ் புறக்கணித்த நிலையில் அக்கட்சி நடத்திய போராட்டத்தில் ப சிதம்பரம் பங்கேற்றுள்ளார்.
மத்திய பிரதேசத்தில் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இளைஞர் ஒருவர் தனது திருமண பத்திரிக்கையை அச்சடித்துள்ளார். நர்சிங் போர் மாவட்டத்தை சேர்ந்த பிரபா என்பவருக்கு ஜனவரி 18ஆம் தேதியான இன்று திருமணம் நடைபெற உள்ளது.
இந்த நிலையில் ஐ சப்போர்ட் சி ஏ ஏ என்ற வாசகத்துடன் தனது திருமண அழைப்பிதழை உருவாக்கியுள்ளார்.






