--- --:--:-- --

700 சீறும் “காளைகள்”…! 730 இளம் “காளையர்கள்”…! அவனியாபுரத்தில் “ஜல்லிக்கட்டு” விறுவிறுப்பு!!

IMG-20200115-WA0078

தை முதல் நாள்.. தமிழகத்தில் முதல் ஜல்லிக்கட்டாக அவனியாபுரத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ஜல்லிக்கட்டில் சீறிப் பாயும் 700 காளைகளை மல்லுக்கட்டி அடக்க 730 இளம் காளையர்கள் களத்தில் தீரத்துடன் களம் கண்டுள்ளனர்.

 

தை பிறந்தாலே தமிழர்களின் பாரம்பரிய வீர விளையாட்டான ஜல்லிக்கட்டும் களைகட்டி விடும். இந்த ஆண்டும் முதல் ஜல்லிக்கட்டு விளையாட்டு மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் காலை 8 மணிக்கு தொடங்கியது.

 

இந்த ஜல்லிக்கட்டு ஏற்பாடுகளை கண்காணிக்க ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம் தலைமையில் குழு அமைத்து உத்தரவிட்டிருந்தது மதுரை உயர் நீதிமன்ற கிளை. அதன்படி ஓய்வு பெற்ற நீதிபதி மாணிக்கம், வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயக்குமார் ஆகியோர் ஜல்லிக்கட்டை தொடங்கி வைத்தார்.

 

விறுவிறுப்பாக நடைபெறும் இந்த ஜல்லிக்கட்டில் 700 காளைகள், அடக்கிப் பார் என துள்ளி விளையாட பதிவு செய்யப்பட்ட நிலையில், காளைகளுடன் மல்லுக்கட்ட 730 வீரர்களும் களம் காணுகின்றனர். மாலை 4 மணி வரை ஜல்லிக்கட்டு நடைபெறும் நிலையில், ஒரு சுற்றுக்கு தலா 75 வீரர்கள் என்ற ரீதியில் வீரர்கள் களத்தில் இறக்கப்படுகின்றனர்.

 

அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் காளைகளை அடக்கும் வீரர்களுக்கும், அடங்க மறுத்து துள்ளி ஓடும் காளைகளின் உரிமையாளர்களுக்கும் கட்டில், பீரோ, சைக்கிள், அண்டா, குண்டா என விதவிதமான பரிசுகளும் ஏராளமாக வழங்கப்பட்டு, ஜல்லிக்கட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

 

அவனியாபுரத்தைத் தொடர்ந்து நாளை பாலமேட்டிலும், நாளை மறுதினம் உலகப் புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டும் நடைபெற உள்ளது.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon