அன்லிமிட்டட் நாஷா, பர்வீன் பாபி, தி வேர்ல்டு ஆஃப் ஃபேஷன் ஆகிய இந்தி திரைப்படங்களில் கவர்ச்சி வேடங்களில் நடித்தவர் அம்ரிதா தனோவா. தற்போது பட வாய்ப்புகள் எதுவும் இல்லாமல் இருந்த நிலையில் பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் அம்ரிதா தனோவா மும்பை போலீசாரால் கைது செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .
மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் மேற்கு புறநகர் பகுதியான கோரைக்கான் பகுதியில் ஐந்து நட்சத்திர விடுதியில் சிறுமிகளை வைத்து பாலியல் தொழில் நடப்பதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. உஷாரான போலீசார் துணை காவல் ஆணையர் சுவாமி தலைமையில் அதிரடி நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது சிலரை வாடிக்கையாளர்களை போன்று உடை அணியச் செய்து ஐந்து நட்சத்திர விடுதிக்குள் அனுப்பி சோதனையிட்டபோது அங்கு பாலியல் தொழில் நடப்பது உறுதி செய்யப்பட்டது. காவலர்கள் தங்களை சுற்றி வளைத்ததை அறிந்த நடிகை அம்ரிதா அங்கிருந்து தப்ப முயன்று உள்ளார். எனினும் காவலர்கள் அவரை மடக்கிப் பிடித்தனர்.
விடுதி அறையில் பாலியல் தொழிலில் ஈடுபடுவதற்காக அடைத்து வைக்கப்பட்டிருந்த இரண்டு பெண்களை மீட்ட போலீசார் அவர்களிடம் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல் வெளியானது. கடந்த சில தினங்களுக்கு முன்பு ஜுஹு பகுதியில் உள்ள தனியார் விடுதியில் பாலியல் தொழில் செய்யும் கும்பலை போலீசார் மடக்கி பிடித்தனர்.
இதன் தொடர்ச்சியாக பெண்களை பாலியல் தொழிலில் ஈடுபடுத்திய புகாரில் நடிகை அம்ரிதா கைது செய்யப்பட்டார். மேலும் அவருடன் மாடல் அழகி ரிச்சா சிங்கும் கைது செய்யப்பட்டுள்ளார். நடிகைகள் பாலியல் தொழிலில் ஈடுபட்டு கைதாகும் சம்பவம் கடந்த காலங்களிலும் நடந்துள்ளது.
கடந்த 2009 ஆம் ஆண்டு தமிழ் திரைப்பட நடிகை புவனேஸ்வரி உள்ளிட்ட சிலர் கைது விவகாரம் அதனைத் தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு தேசிய விருது பெற்ற தெலுங்கு நடிகை ஸ்வேதா பாசு உள்ளிட்டோர் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாக போலீசாரால் கைது செய்யப்பட்ட விவகாரம் பெரிய அளவில் பேசப்பட்டது.
கோடிகளைக் கொட்டி கொண்டாட்டத்திற்கு வழிகாட்டும் திரையுலகம் பல நேரங்களில் பாலியல் தொழிலுக்கு வழிவகுத்து விடுகிறது. இந்த விவகாரத்தில் பாலிவுட் நடிகை கைது செய்யப்பட்டுள்ளது பாலிவுட் திரையுலகை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது.