கடலூர் அருகே சாலையோரம் வீசப்பட்ட தேசியக் கொடியை எடுத்து பாதுகாத்த பாதுகாவலரை நேரில் அழைத்து சென்னை மாநகர காவல் ஆணையர் விஸ்வநாதன் பாராட்டினார்.
கடந்த மாதம் 20ஆம் தேதி கடலூர் மாவட்டம் லால்பேட்டையில் குடியுரிமை சட்ட திருத்தத்திற்கு எதிராக போராட்டம் நடத்தியவர்கள் தேசியக்கொடியை சாலையிலேயே வீசி சென்று விட்டனர். அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த தமிழ்நாடு சிறப்பு காவல் படை 10வது அணியை சேர்ந்த காவலர் கார்த்திகேயன் தரையில் கிடந்த தேசியக்கொடியை எடுத்து தலை நிமிர்த்தி ஓரமாக எடுத்து வைத்தார்.
இதை பார்த்து மற்றொரு காவலர் படம் எடுத்த வீடியோ வெளியானது. இந்த காட்சிகள் பரவிய நிலையில் காவலர் கார்த்திகேயனை சென்னை மாநகர காவல் ஆணையர் ஏ கே விஸ்வநாதன் பாராட்டி வெகுமதி வழங்கினார்.
மேலும் செய்திகள் :
திருப்பூரில் அரசு விழாக்களில் ஆளுங்கட்சியினர் அட்ராசிட்டி..! கைத்தடிகளுக்கு கடிவாளம் போடுவாரா எம்.எம...
வீடு புகுந்து சாம்சங் தொழிலாளர்கள் கைது..!
ஜிப்மர் மருத்துவமனைக்கு வெடிகுண்டு மிரட்டல்..!
நண்பருடன் சேர்ந்து துடிக்க துடிக்க அண்ணனை வெட்டிக்கொன்ற தம்பி..!
வீடியோ சிக்கினாலே 10 ஆண்டு சிறை.. கல்லூரி மாணவர்களுக்கு காவல்துறை எச்சரிக்கை..!
சாம்பல் உரத்தில் கலப்படம்..அழுகிய வாழை கன்றுகள்..புலம்பும் விவசாயிகள்..!