போர் பதற்றம் – வளைகுடா பிராந்தியத்தில் இந்திய கடற்படை கப்பல்கள் நிலைநிறுத்தம்

அமெரிக்கா – ஈரான் இடையே போர் பதற்றம் நீடிக்கும் நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன. ஈராக்கில் உள்ள அமெரிக்க ராணுவ தளங்கள் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் நடத்தியது சர்வதேச அளவில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.

 

இதனால் மத்திய கிழக்கு நாடுகளில் பதற்றம் அதிகமானது. இந்த நிலையில் இந்திய கடற்படை கப்பல்கள் வளைகுடா பிராந்தியத்தில் நிலை நிறுத்தப்பட்டுள்ளன.

 

அந்த கப்பல்களில் போர் விமானங்களும் தயார் நிலையில் உள்ளன. கடல் வழியே நடைபெறும் இந்திய வர்த்தகம் மற்றும் இந்திய வர்த்தக கப்பல்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் கப்பல்கள் நிலை நிறுத்தப்பட்டு இருப்பதாக கடற்படை தெரிவித்துள்ளது.


Leave a Reply