அதிகாலையில் வெளியானது ரஜினியின் தர்பார்..! ஆட்டம் பாட்டத்துடன் ரசிகர்கள் உற்சாகம்!!

ரஜினியில் தர்பார் திரைப்படம் இன்று வெளியானது. சிறப்புக் காட்சியாக அதிகாலை 4 மணிக்கு திரையிடப்பட்ட படத்தைக் காண விடிய, விடிய காத்திருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டத்துடன் உற்சாகத் துள்ளல் போட்டு அபிமான நடிகரின் நடிப்பை ரசித்தனர்.

 

இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில், சூப்பர் ரஜினியின் நடிப்பில் உருவான தர்பார் திரைப்படம் உலகம் முழுவதும் இன்று வெளியானது. போலீஸ் அதிகாரி வேடத்தில் மிடுக்கு நடை போடும் ரஜினிக்கு ஜோடியாக நயன்தாரா நடித்துள்ள இத் திரைப்படம், தமிழகம் முழுவதும் இன்று அதிகாலை 4 மணிக்கு சிறப்புக் காட்சியாக வெளியானது.

 

தர்பார் படத்தைக் காண இரவு முதலே தியேட்டர்களின் வாசலில் திரண்டிருந்த ரசிகர்கள் ஆட்டம், பாட்டம் என விடிய, விடிய குஷியாக கொண்டாடி வந்தனர். படம் திரையிடப்பட்ட போது ஆரவாரத்துடன் கேக் வெட்டி, பட்டாசுகளை வெடித்து நடனமாடி தங்கள் உற்சாகத்தை வெளிப்படுத்தினர்.

 

ரஜினிக்கு 167-வது படமாக அமைந்துள்ள தர்பார் படம் தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளில் தயாரிக்கப்பட்டு இந்தியா முழுவதும் மட்டும் 4 ஆயிரம் தியேட்டர்களில் வெளியாகியுள்ளது. படம் திரைக்கு வருவதையொட்டி வெளிநாடு சென்றிருந்த ரஜினி நேற்றே சென்னை திரும்பி விட்டார்.


Leave a Reply