மற்ற மாடுகளிடமிருந்து பிரிய மனமில்லாமல் மண்டியிட்டு மன்றாடிய பசு

சீனாவில் கருவுற்ற பசுவை மற்ற மாடுகளிடமிருந்து தன்னை பிரிக்க முயன்றவர்களிடம் மண்டியிட்டு மன்றாடிய வீடியோ வெளியாகியுள்ளது. தெற்கு, சீன பகுதியிலுள்ள மாட்டு மந்தை ஏராளமான பசுக்கள் மற்றும் காளைகள் வளர்க்கப்பட்டு வருகின்றன.

 

இந்த நிலையில் அங்கிருந்த பசு ஒன்று கருவுற்றதால் அதன் பாதுகாப்பு கருதி மற்ற மாடுகளிடமிருந்து அதனை பிரித்து மற்றொரு இடத்திற்கு அனுப்ப மந்தையில் உரிமையாளர் முடிவு செய்தார். இதனையடுத்து மந்தையில் பணியாற்றும் ஊழியர்கள் பசுவை அழைத்து செல்ல முயன்றனர்.

 

ஆனால் தன்னுடன் இருந்த சக மாடுகளை பிரிய மனமில்லாத அந்த பசு மண்டியிட்டு கண்ணீர் வழிய மன்றாடியது. பின்னர் அதனை பக்குவமாக அழைத்து செல்ல முயன்ற போதும் அவ்வப்போது மண்டியிட்டு மன்றாடிய வண்ணம் இருந்தது. ஆனாலும் பாதுகாப்புக் கருதி, வந்த ஊழியர்கள் பசுவை அங்கிருந்து அப்புறப்படுத்தினர்.


Leave a Reply