காட்டு யானையிடம் இருந்து நொடிப்பொழுதில் உயிர் தப்பிய இளைஞர்! வைரல் வீடியோ!

ஓசூரில் ஆக்ரோஷமாக துரத்திய காட்டு யானையிடம் இருந்து நொடிப்பொழுதில் இளைஞர் உயிர்தப்பிய வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது.

 

ஓசூர் அருகே உள்ள சானமாவு வனப்பகுதியில் முகாமிட்டிருந்த 50க்கும் மேற்பட்ட காட்டு யானைகளை வனத்துறையினர் தேன்கனிக்கோட்டை வனபகுதிக்கு விரட்டி செல்லும் போது அதனை காண ஏராளமான இளைஞர்கள் பின்தொடர்ந்து சென்றனர்.

 

அப்போது கூட்டத்திலிருந்து பிரிந்து யானை இளைஞர்களை ஆக்ரோஷத்தோடு துரத்தி சென்று உள்ளது. இதனால் அச்சமடைந்து ஓடிய ஒரு இளைஞர் யானையிடம் இருந்து தப்பிக்க முயலும் போது கால் இடறி கீழே விழுந்தார்.

 

ஆனால் அந்த யானை திடீரென திருப்பி சென்றதால் அந்த இளைஞர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இந்த காட்சிகள் அனைத்தையும் அந்த பகுதியில் இருந்த ஒருத்தர் கைபேசியில் படம் பிடித்து சமூக வலைதளங்களில் பதிவிட்டுள்ளார்.


Leave a Reply