--- --:--:-- --

விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 4 வீரர்கள் தேர்வு..! இஸ்ரோ தலைவர் சிவன் அறிவிப்பு!!

sdfg

இந்தியா சார்பில் முதன் முறையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு, 4 வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக இஸ்ரோ தலைவர் சிவன் தெரிவித்துள்ளார்.

 

விண்வெளித் திட்டங்களில் இந்தியா தொடர்ந்து பல சாதனைகளை படைத்து உலக நாடுகளுக்கு சவால் விட்டு வருகிறது. இந்நிலையில் அடுத்த சாதனையாக விண்வெளிக்கு மனிதனை அனுப்பும் ககன்யான் திட்டத்தையும் இஸ்ரோ அறிவித்திருந்தது. இத்திட்டத்திற்கு மத்திய அரசும் ரூ.10 ஆயிரம் கோடி ஒதுக்கியது.அத்துடன் இத்திட்டன்படி 2022-ல் விண்வெளிக்கு இந்தியா மனிதனை அனுப்பி வைக்கும் என்ற அறிவிப்பை, கடந்த சுதந்திர தினத்தன்று பிரதமர் மோடி தனது உரையில் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து விண்வெளிக்கு பயணமாகும் வீரர்களை தேர்வு செய்யும் பணி விறுவிறுப்பாக நடைபெற்று வந்தது. தொடர்ந்து, இன்று பெங்களூருவில் செய்தியாளர்களைச் சந்தித்த இஸ்ரோ தலைவர் சிவன், விண்வெளிக்கு செல்லும் 4 இந்திய வீரர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர் என தெரிவித்தார். இந்திய விமானப் படையைச் சேர்ந்த 4 வீரர்களுக்கும் ஜனவரி 3-வது வாரம் முதல் பயிற்சி தொடங்கும் என்றும், ரஷ்யாவிலும் பயிற்சிமேற்கொள்வார்கள் எனவும் அவர் தெரிவித்தார். விண்வெளிக்கு வீரர்களை அனுப்பும் முன், சோதனை முயற்சியாக இரண்டு முறை ஆளில்லா விண்கலத்தை விண்வெளிக்கு அனுப்ப உள்ளதாகவும் சிவன் கூறினார்.

 

ஸ்ரீஹரிகோட்டாவைத் தொடர்ந்து 2-வதாக தூத்துக்குடியில் புதிதாக ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்பட உள்ளதாகவும், அதற்கான நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது. சந்திராயன்-3 திட்டத்திற்கும் மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது என்றும், இந்த ஆண்டில் மட்டும் 50 விண்வெளி திட்டங்கள் செயல்படுத்தப்படும் எனவும் சிவன் தெரிவித்தார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon