நடிகர் ஒருவரை துணை நடிகையும், அவரது குடும்பத்தினரும் சேர்ந்து கொடூரமாக கொலை செய்துள்ளனர். அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கும் இந்த கொலைக்கான காரணம் தான் என்ன?
வீட்டிற்கு வந்து ரகளையில் ஈடுபட்ட ஒரு துணை நடிகரை குடும்பமே சேர்ந்து அடித்துக் கொலை செய்துள்ளது. அதிர்ச்சியூட்டும் இந்த சம்பவத்தின் பின்னணியில் தகாத-உறவு விவகாரம் இருப்பதும் தெரியவந்துள்ளது. சென்னை கொரட்டூர் பகுதியை சேர்ந்தவர் சங்கர். இவருக்கு திருமணமாகி தேவி என்ற மனைவி இருக்கிறார்.
தேவி சினிமாவிலும், தொலைக்காட்சி சீரியல்களிலும் சின்னச்சின்ன வேடங்களில் நடித்து வருகிறார். தேவியின் சகோதரி லக்ஷ்மி கொளத்தூர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இந்நிலையில் தேவியின் துணை நடிகையான ரவி என்பவர் லட்சுமியின் வீட்டிற்கு சென்று ரகளையில் ஈடுபட்டுள்ளார். தேவி இருக்கும் இடம் குறித்து கூறுமாறு அவர் லட்சுமியிடம் கேட்டு சண்டையிட்டதாக கூறப்படுகிறது.
ஆனால் அவரது இருப்பிடத்தை கூற மறுத்த லட்சுமி இதுகுறித்து தேவிக்கு தகவல் அளித்துள்ளார். உடனடியாக லட்சுமியின் வீட்டிற்கு கணவருடன் வந்துள்ளார் தேவி. அப்போது அங்கு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்த ரவியிடம் பேச்சுவார்த்தை நடத்திய அவர்கள் வீட்டை விட்டு வெளியேறுமாறு கூறியுள்ளனர். ஆனால் அதை ஏற்க மறுத்து ரவி தகராறில் ஈடுபட்டுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த தேவி, அவரது கணவர் சங்கர், லட்சுமி மற்றும் லக்ஷ்மியின் கணவர் சவாரி ஆகியோர் சேர்ந்து உருட்டுக்கட்டையால் ரவியை சரமாரியாக தாக்கியுள்ளனர். இதில் பலத்த காயமடைந்த ரவி சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இதையடுத்து 4 பேரும் ராஜமங்கலம் காவல் நிலையத்திற்கு சென்று சரணடைந்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில் தகாத-உறவு விவகாரத்தில் இந்த கொலை அரங்கேறியது தெரியவந்தது.
சென்னை வடபழனியில் தங்கி தேவி சினிமாவிலும் தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்து வந்த போது துணை நடிகரான ரவியுடன் தகாத உறவு ஏற்பட்டுள்ளது. எட்டு ஆண்டுகளாக இந்த உறவு நீடித்து வந்த நிலையில், இந்த விவகாரம் தெரிய வந்ததும் தேவியின் கணவர் மனைவியை கண்டித்துள்ளார். இதையடுத்து ரவி உடனான தவறான உறவை கைவிட்ட தேவி குடும்பத்துடன் கொரட்டுருக்கு குடிபெயர்ந்தார்.
இரண்டு ஆண்டுகளாக ரவியுடன் எந்த தொடர்பும் இல்லாமல் நிம்மதியாக குடும்பம் நடத்தி வந்துள்ளார். இந்த நிலையில்தான் லட்சுமியின் வீட்டை கண்டுபிடித்த ரவி அங்கு சென்று தேவியின் இருப்பிடத்தை கூறுமாறு கேட்டு தகராறில் ஈடுபட்டுள்ளார். மேலும் லட்சுமியிடமும் அவர் தகாத முறையில் நடக்க முயற்சி செய்துள்ளார். இதையடுத்து தான் தேவியை வரவழைத்து சமாதானம் பேச முயன்றுள்ளனர்.
ஆனால் ரவி எதையும் கேட்காததால் சுத்தியல் மற்றும் உருட்டுக் கட்டைகளால் அவரை தாக்கி கொலை செய்துள்ளனர். இதையடுத்து ரவியின் சடலத்தை கைப்பற்றி கீழ்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பிய போலீசார் 4 பேரையும் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.