பெண்கள் பாதுகாப்புக்கு கேரளாவில் ”நைட் வாக்” என்ற புது திட்டம்
கேரளாவில் பெண்கள் பாதுகாப்பிற்கு நைட் வாக் என்ற புதிய திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இரவு நேரத்தில் தனியாக செல்லும் பெண்களிடமும் அல்லது சேர்ந்து செல்லும் பெண்களிடமும் தவறான முறையில் நடக்க முயலும் ஆண்களுக்கு பாடம் புகட்டும் வகையில் புதிய திட்டத்தை கேரள அரசு அறிமுகம் செய்துள்ளது.
நைட் வாக் என்று பெயரிடப்பட்டுள்ள இந்த திட்டம் நிர்பாயா உயிரிழந்த தினமான டிசம்பர் 29ம் தேதி முதல் தொடங்கியுள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை ஒரு மணி வரை பெண்களின் நைட் வாக் என்ற இரவு நேரத்தில் நடமாடும் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இந்த திட்டத்தின்படி நகராட்சி மாநகராட்சி பகுதிகளில் உள்ள 100 மையங்களில் இரவு நேரங்களில் இரண்டு மூன்று பெண்கள் தெருக்களில் நடந்து சென்றனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




