2 ஆண் குழந்தைகள் மர்மக் காய்ச்சலால் அடுத்தடுத்து உயிரிழப்பு

திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே உடன் பிறந்த இரண்டு ஆண் குழந்தைகள் காய்ச்சல் காரணமாக அடுத்தடுத்து உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

 

தலையா மங்கலத்தை சேர்ந்த சிவகுமார், நிஷா தம்பதிக்கு 4 வயதில் சசிவிந்த் மற்றும் இரண்டு வயதில் அசிவிந்த் என இரண்டு மகன்கள் இருந்தனர். இருவருக்கும் கடந்த மூன்று நாட்களுக்கு முன் காய்ச்சல் ஏற்பட்டுள்ளது. தலையாமங்கலம் கூத்தாநல்லூர் மன்னார்குடி ஆரம்ப சுகாதார நிலையங்களில் சிகிச்சை பெற்றும் பலன் அளிக்காத நிலையில் இருவரும் அடுத்தடுத்து உயிரிழந்ததாக கூறப்படுகிறது.

 

கடந்த மூன்று மாதங்களில் இது நான்காவது இறப்பு என்று கூறப்படும் நிலையில் காய்ச்சலின் வகை குறித்து ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.


Leave a Reply