நாட்டிலேயே தமிழகம் முதலிடம் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது

நாட்டிலேயே பொது நிர்வாகத்தில் தமிழக அரசு முதலிடம் பிடித்து இருப்பதன் மூலமாக மாநிலத்தில் நல்லாட்சி நடைபெறுவது உறுதியாக இருப்பதாக துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

நல்லாட்சி வழங்குவதில் தமிழகத்திற்கு மத்திய அரசு முதலிடம் வழங்கியுள்ளதை அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் விமர்சித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர் இந்த ஆண்டின் தலைசிறந்த நகைச்சுவையோடு 2019ஆம் ஆண்டு நம்மிடமிருந்து விடை பெறுகிறது என்று டிடிவிதினகரன் குறிப்பிட்டிருந்தார்.

 

இதற்கு பதில் அளிக்கும் விதமாக அதிமுக ஆட்சிக்கு கிடைத்த பெருமையை நகைச்சுவையாக விமர்சிக்கும் டிடிவிதினகரன் போன்றவர்கள்தான் உண்மையில் கோமாளிகள் என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.


Leave a Reply