குடியுரிமை சட்டத்திற்கு எதிராக பேரணி : 13 ஆயிரம் பேர் மீது வழக்குப்பதிவு

குடியுரிமை திருத்த மசோதாவை திரும்ப பெற வலியுறுத்தி கடையநல்லூரில் நடைபெற்ற பேரணியில் பங்கேற்ற பெண்கள் உட்பட 13 ஆயிரம் பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. தென்காசி மாவட்டம் கடையநல்லூர் குடியுரிமை திருத்த சட்ட மசோதாவை வலியுறுத்தி ஐக்கிய ஜமாத் மற்றும் இஸ்லாமிய அமைப்புகள் சார்பில் பிரமாண்ட பேரணி நடைபெற்றது.

 

இதில் பெண்கள் உட்பட 13 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கடையநல்லூர் வெட்கமாநிய புறத்தில் தொடங்கிய இந்தப் பேரணியில் மிகப்பெரிய தேசியக் கொடியை ஏந்தியவாறு மூன்று கிலோ மீட்டர் தூரம் நடந்து சென்றனர். கைகளில் பதாகைகளை ஏந்தியும் மத்திய அரசுக்கு எதிராக முழக்கமிட்டபடி அவர்கள் ஊர்வலமாக சென்றனர். இறுதியாக காகித மில்லர் தெருவில் இந்த பேரணி முடிவுற்றது.

 

இரண்டாயிரத்துக்கும் மேற்பட்ட காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்த பேரணி அனுமதி இல்லாமல் நடைபெற்றதால் இதில் கலந்துகொண்ட பெண்கள் உள்ளிட்ட 13 ஆயிரம் பேர் மீது காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.


Leave a Reply