தாளவாடி அருகே கரும்பு தோட்டத்தில் கிடந்த சிறுத்தை புலி குட்டிகளை அவற்றின் தாயுடன் சேர்க்கும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர். ஈரோடு மாவட்டம் தாளவாடி அருகே உள்ள தொட்டமுதுகரை கிராமத்தை சேர்ந்த யுவராஜ் என்பவரின் நிலத்தில் கரும்பு வெட்டும் பணி நடைபெற்றது.
இதில் இன்று காலை கரும்பு வெட்டும் பணியில் பணியாளர்கள் ஈடுபட்டபோது தோட்டத்திற்குள் சத்தம் ஒன்று கேட்டுள்ளது. அருகில் சென்று பார்த்தபோது அங்கு இரண்டு சிறுத்தை குட்டிகள் இருப்பதை பார்த்து பணியாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
பிறந்து சில மாதங்களே ஆன இந்த சிறுத்தைப்புலி குட்டிகள் குறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் சிறுத்தையை புலிக்குட்டிகளை மீட்டு அவற்றை அவற்றின் தாயுடன் சேர்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர்.