கேரள பிரபல டிவி நட்சத்திரம் ஜகீ ஜான் மர்ம மரணம்
கேரளாவை சேர்ந்த பிரபல சின்னத்திரை பெண் நட்சத்திரமான ஜகி ஜான் அவரது வீட்டில் மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார். சமையல் கலைஞர், மாடல், பாடகர், ஊக்குவிப்பு பேச்சாளர் என பன்முகத்திறமையிலுள்ள ஜகிஜான் ஏராளமான டிவி நிகழ்ச்சிகளிலும் நடுவராக பங்கேற்று ரசிகர்களிடம் தனி கவனத்தை ஈர்த்தவர்.
இந்நிலையில் கேரள மாநிலம் குறவன் கோணத்தில் உள்ள அவரது வீட்டின் சமையலறையில் இருந்து அவரது உடல் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது. போலீசார் இது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில் ஜாகிசானின் மர்ம மரணம் கேரள சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




