எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை, மக்களுக்குத்தான் வேதனை

அதிமுகவிடம் இருந்து தமிழகத்தை காப்பதற்கான முன்னோட்டமே உள்ளாட்சி தேர்தல் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

 

இதுதொடர்பாக வீடியோ வெளியிட்டிருக்கும் அவர் உள்ளாட்சித் தேர்தலில் திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களை ஆதரிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ளார். ஊழலின் முதலிடம், லஞ்சத்தில் முதலிடம், டெங்கு காய்ச்சலில் முதலிடம், காசநோயின் முதலிடம், எதெல்லாம் மக்களுக்கு எதிரானதோ அதிலெல்லாம் முதலிடம் இதுதான் எடப்பாடி பழனிசாமி அரசின் சாதனை எனவும், இதனால் மக்களுக்கு தான் வேதனை எனவும் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.

 

இப்படிப்பட்டவர்களிடம் இருந்து நாட்டை மீட்பதற்கான ஒரு முன்னோட்டம்தான் இப்பொழுது வந்துள்ள உள்ளாட்சிதேர்தல் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply