சென்னை காசிமேட்டில் அண்ணன், தம்பி இருவரும் ஒரே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்துகொண்ட சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
காசி தோட்டம் இரண்டாவது தெருவில் வசித்து வந்த பொறியியல் பட்டதாரி ஆரோக்கிய ஆகாஷ் தற்கொலை செய்து கொள்வதாக அவரது நண்பரிடம் தெரிவித்திருக்கிறார். தகவலறிந்து அவரது அண்ணன் இருதயராஜ் வீட்டிற்கு சென்று பார்த்தபோது ஆரோக்கிய ஆகாஷ் தூக்கில் தொங்கி உள்ளார்.
மருத்துவமனைக்கு அவரது உடல் அனுப்பி வைக்கப்பட்டிருந்த நிலையில் தம்பி தற்கொலை செய்த அதே இடத்தில் அதே துணியில் இருதயராஜ் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டிருக்கிறார். ஐடி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்த ஆரோக்கிய ஆகாஷ் மதுப்பழக்கத்திற்கு அடிமையாகி சரியாக பணிக்கு செல்லவில்லை என்று கூறப்படுகிறது.
மனவருத்தத்தில் தம்பியும், தம்பி இறந்த சோகத்தில் அண்ணனும் தூக்கிட்டு தற்கொலை செய்ததாக தெரிகிறது. இது குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.