போராட்டம் என்ற பெயரில் வன்முறையை தூண்டுவது சரியானதல்ல

ஜனநாயகப் போராட்டம் என்ற பெயரில் வன்முறையைத் தூண்டுவது சரியானது அல்ல என ஹிந்தி நடிகை கங்கனா ரனாவத் கருத்து தெரிவித்துள்ளார்.

 

நாட்டில் பசி, பட்டினி போன்ற பல்வேறு பிரச்சினைகள் இருக்கும் நிலையில் ரயில், பேருந்துகளின் மீது கற்களை வீசுவதும், அவற்றை எரித்து வன்முறையில் ஈடுபடுவதும் என்றைக்கும் தீர்வாகாது என கூறியிருக்கிறார்.

 

சுதந்திரத்திற்காக நாம் போராடியதுபோல் தற்போது போராடி வருவது உகந்தது அல்ல என கங்கனா ரனாவத் குறிப்பிட்டுள்ளார். நாடுமுழுவதும் குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிராக நடைபெறும் போராட்டம் குறித்து கங்கனா இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார்.


Leave a Reply