--- --:--:-- --

பெட்ரோல், டீசல் விலை சற்று அதிகரிக்க வாய்ப்பு

7

பெட்ரோல், டீசல் விலை வரும் மாதங்களில் சற்று அதிகரிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அரசு விதிமுறைகளின்படி ps6 தர இன்ஜின் கொண்ட வாகனங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதற்கு ஏற்றவாறு எரிபொருட்களை வழங்க வேண்டிய சூழல் எண்ணெய் நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ளது.

 

இதனால் பொதுத்துறை மற்றும் தனியார் துறையை சேர்ந்த எண்ணெய் நிறுவனங்கள் சில்லறை விற்பனையில் பெட்ரோல், டீசலுக்கு பிரீமியம் தொகை வசூலிக்க மத்திய அரசிடம் அனுமதி கோரியுள்ளனர். இதற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தால் பெட்ரோலுக்கு 80 காசும், டீசலுக்கு ஒரு ரூபாய் 50 காசு வரையும் பிரீமியம் வசூலிக்க எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon