ஐஐடி, ஐஐஎம் உள்ளிட்ட மத்திய அரசின் கல்வி நிறுவனங்களில் பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகப்பிற்படுத்தப்பட்டோர், சீர்மரபினர் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்துள்ளது.
மத்திய அரசின் கல்வி நிறுவனங்கள், மத்திய பல்கலைக்கழகங்களில் பட்டப்படிப்பு, பட்ட மேற்படிப்பு பயிலும் தமிழ்நாட்டை சேர்ந்த பிற்படுத்தப்பட்ட, மிகப் பிற்படுத்தப்பட்ட மற்றும் சீர்மரபினர் மாணவ ,மாணவிகளுக்கு ஆண்டுக்கு இரண்டு லட்சம் ரூபாய் வரை கல்வி உதவித்தொகை வழங்க தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
உதவித்தொகை பெறும் மாணவர்களின் குடும்பத்தின் ஆண்டு வருமானம் இரண்டு லட்சம் ரூபாய்க்கு மிகாமல் இருக்க வேண்டும். கல்வி உதவித் தொகைக்கு விண்ணப்பிக்க தகுதியுள்ள மாணவ, மாணவியர்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலரை அணுகி பயனடைய கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.