திடீரென திமுகவில் இணைந்த அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர்

புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் 14-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்த அதிமுகவை சேர்ந்தவர் திமுகவில் இணைந்து இருக்கிறார்.

 

மணமேல்குடி ஊராட்சி ஒன்றியத்தில் உள்ள 14-ஆவது வார்டு ஒன்றியக் கவுன்சிலர் பதவிக்கு அதிமுகவை சேர்ந்த நாராயணன் வேட்பு மனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில் நாராயணனை திமுகவினர் கட்டாயப்படுத்தி வேட்பு மனுவை வாபஸ் வாங்க அழைத்து வருவதாக கூறி, அதிமுக – திமுக தரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டது.

 

இதில் 8 பேர் காயமடைந்த நிலையில் திமுகவினர் மீது காவலர்கள் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் நாராயணன் புதுக்கோட்டையில் உள்ள திமுக தெற்கு மாவட்ட பொறுப்பாளரும், முன்னாள் அமைச்சருமான ரகுபதியை சந்தித்து தன்னை அதிமுகவில் இணைத்துக் கொண்டார்.

 

அதிமுக ஒன்றிய கவுன்சிலர் வேட்பாளர் ஒருவர் வேட்புமனு தாக்கல் செய்ததற்கு பின் திமுகவில் இணைந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


Leave a Reply