ருசிகர சாக்லேட் திருவிழா – 2020 வடிவங்களில் சாக்லேட்டுகள்

நீலகிரி மாவட்டம் உதகையில் தனியார் நிறுவனம் சார்பில் ஆண்டு தோறும் சாக்லேட் திருவிழா நடைபெற்று வருகிறது. கிறிஸ்மஸ் மற்றும் புத்தாண்டை வரவேற்கும் விதமாக 15 நாட்கள் சாக்லேட் திருவிழா நடைபெறுகிறது.

 

சுமார் 120 கிலோ சாக்லேட்டை கொண்டு 2020 வடிவங்களில் சாக்லேட்டுகள் தயாரிக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. கீழடியில் கிடைத்த பழங்கால பொருட்களின் வடிவங்களிலும் சாக்லேட்டுகள் இடம்பெற்றுள்ளன.

 

மூங்கிலரிசி, திணை, சாமை, குதிரைவாலி உள்ளிட்ட 8 தானியங்களைக் கொண்டு தயாரிக்கப்பட்ட சாக்லேட்களும் கண்காட்சியில் இடம் பெற்றுள்ளன. ஒரு கிலோ 300 ரூபாய் முதல் 3 ஆயிரத்து 500 ரூபாய் வரை விலை கொண்ட சாக்லேட்டுகள் திருவிழாவில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.


Leave a Reply