--- --:--:-- --

{17.12.2019} செவ்வாய்கிழமை இன்றைய ராசிபலன்கள்

ih

மார்கழி – 01

17.12.2019 – செவ்வாய்கிழமை.

வருடம்-விகாரி வருடம். {விகாரி நாம சம்வத்ஸரம்}

அயனம் -தக்ஷிணாயணம்.

ருது – ஹேமந்த ருதௌ.

மாதம் – மார்கழி ( தனுர் மாஸம் .)

பக்ஷம் – கிருஷ்ண பக்ஷம்.

திதி – ஷஷ்டி.

ஸ்ரார்த்த திதி – ஷஷ்டி.

நாள் – செவ்வாய்க்கிழமை {பௌம வாஸரம் }

நக்ஷத்திரம் – மகம் .

யோகம் – சித்த யோகம் .

கரணம் – கரஜை,வணிஜை .

நல்ல நேரம் – காலை 07.45 AM ~ 08.45 AM & 01.45 PM ~ 02.45 PM.

ராகு காலம் ~ பிற்பகல் 03.00 PM ~ 04.30 PM.

எமகண்டம் – காலை 09.00 AM ~10.30 AM.

குளிகை – 12.00 NOON ~ 01.30 PM.

சூரிய உதயம் – காலை 06.23 AM.

சூரிய அஸ்தமனம் – மாலை 05.42 PM.

சந்திராஷ்டமம்- திருவோணம்.

சூலம் – வடக்கு.

பரிகாரம் – பால்.

 

இன்று – தனுர் மாத பூஜை ஆரம்பம்

 

ராசி பலன்கள்

 

🔯மேஷம் ராசி

 

துணிவுமிக்க தீரச் செயல்களால் மேன்மை உண்டாகும். கௌரவ பதவிகளால் உங்களின் மதிப்பு உயரும். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். புதிய நுட்பங்களை பயில்வதற்கான பயிற்சிகளில் கலந்து கொள்வீர்கள். செய்தொழிலில் மேன்மையான சூழல் அமையும். பிள்ளைகளின் கல்வியில் முன்னேற்றம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : இளஞ்சிவப்பு

 

அஸ்வினி : மேன்மை உண்டாகும்.
பரணி : மதிப்பு உயரும்.
கிருத்திகை : முன்னேற்றமான நாள்.

 

🔯ரிஷபம் ராசி”

 

பேச்சுக்களால் தனலாபம் உண்டாகும். பொருளாதார மேன்மைக்கான உதவிகள் நண்பர்களின் மூலம் கிடைக்கும். சுரங்க பணியாளர்கள் பணிகளில் எச்சரிக்கையுடன் இருக்கவும். பெரியோர்களின் ஆதரவு கிடைக்கும். புனித யாத்திரை செல்வதற்கான வாய்ப்புகள் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 2
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

கிருத்திகை : தனலாபம் உண்டாகும்.
ரோகிணி : ஆதரவு கிடைக்கும்.
மிருகசீரிஷம் : வாய்ப்புகள் உண்டாகும்.

 

🔯மிதுனம் ராசி

 

கணவன், மனைவிக்கிடையே இருந்துவந்த பிரச்சனைகள் குறைந்து உறவுநிலை மேலோங்கும். வெளியூர் பயணங்களால் மகிழ்ச்சி அடைவீர்கள். தொழிலில் தேவையற்ற பேச்சுக்களை தவிர்ப்பது நன்று. முயற்சிகளால் தனலாபம் உண்டாகும். நண்பர்களின் மூலம் வருமான வாய்ப்புகள் அதிகரிக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஊதா நிறம்

 

மிருகசீரிஷம் : உறவுகள் மேம்படும்.
திருவாதிரை : விவாதங்களை தவிர்க்கவும்.
புனர்பூசம் : தனலாபம் கிடைக்கும்.

 

🔯கடகம் ராசி

 

ஆடைச்சேர்க்கையால் மகிழ்ச்சி அடைவீர்கள். உயர்கல்வி பயிலும் மாணவர்களின் நினைவாற்றலில் மந்தத்தன்மை உண்டாகும். போட்டிகளில் ஈடுபட்டு வெற்றி அடைவீர்கள். விளையாட்டு வீரர்களுக்கு சாதகமான நாள். பதவி உயர்விற்கான முயற்சிகள் கைகூடும். பூர்வீக சொத்துக்களால் இலாபம் உண்டாகும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : இளம் பச்சை

 

புனர்பூசம் : மகிழ்ச்சியான நாள்.
பூசம் : வெற்றி கிடைக்கும்.
ஆயில்யம் : முயற்சிகள் கைகூடும்.

 

🔯சிம்மம் ராசி

 

பூர்வீக சொத்து விவகாரங்களில் பிரச்சனைகள் ஏற்படும். பிள்ளைகளால் சுபச்செலவுகள் உண்டாகும். பொதுக் காரியங்களுக்கு தேவையான உதவிகளை செய்வீர்கள். மாணவர்கள் கல்வியில் செய்யும் புதுவித முயற்சிகள் நன்மை பயக்கும். தேவையற்ற எண்ணங்களால் மனம் சஞ்சலப்படும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 6
அதிர்ஷ்ட நிறம் : சந்தன வெள்ளை நிறம்

 

மகம் : சுபவிரயம் உண்டாகும்.
பூரம் : உதவிகளை செய்வீர்கள்.
உத்திரம் : மனம் சஞ்சலப்படும்.

 

🔯கன்னி ராசி

 

வெளியூர் பணிகளால் அனுகூலமான சூழல் உண்டாகும். புண்ணிய காரியங்களுக்கு நன்கொடை அளித்து மகிழ்வீர்கள். புதிய மனை வாங்குவதற்கான வாய்ப்புகள் சாதகமாகும். அரசாங்கத்திடமிருந்து எதிர்பார்த்த அனுகூலமான பலன்கள் கிடைக்கும். உடல் ஆரோக்கியத்தில் கவனத்துடன் இருக்கவும்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 4
அதிர்ஷ்ட நிறம் : சாம்பல் நிறம்

 

உத்திரம் : அனுகூலமான நாள்.
அஸ்தம் : வாய்ப்புகள் சாதகமாகும்.
சித்திரை : கவனத்துடன் இருக்கவும்.

 

🔯துலாம் ராசி

 

மூத்த சகோதரர்களால் சாதகமான சூழல் அமையும். கடல் மார்க்க பயணங்களால் நன்மை உண்டாகும். வீடு கட்டுவதற்கான புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள். கால்நடைகளை வைத்து பராமரிப்பவர்களுக்கு சாதகமான நாள். தாயின் ஆதரவால் புதிய முயற்சிகளை மேற்கொள்வீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 5
அதிர்ஷ்ட நிறம் : அடர் பச்சை

 

சித்திரை : சாதகமான நாள்.
சுவாதி : நன்மை உண்டாகும்.
விசாகம் : முயற்சிகளை மேற்கொள்வீர்கள்

 

🔯விருச்சகம் ராசி

 

அந்நியர்களால் இலாபம் உண்டாகும். பெரியோர்களின் ஆசிகள் கிடைக்கும். தொழில் சம்பந்தமான புதிய முயற்சிகளால் கீர்த்தி உண்டாகும். இளைய சகோதரர்கள் சாதகமாக நடந்து கொள்வார்கள். தந்தையின் உடல்நலனில் மேன்மை உண்டாகும். கால்நடைகளால் எண்ணிய இலாபம் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : வடக்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : நீலநிறம்

 

விசாகம் : இலாபம் கிடைக்கும்.
அனுஷம் : கீர்த்தி உண்டாகும்.
கேட்டை : மேன்மையான நாள்.

 

🔯தனுசு ராசி

 

பொதுக்கூட்டப் பேச்சுக்களால் கீர்த்தி உண்டாகும். எண்ணிய எண்ணங்களுக்கு செயல்திட்டம் அளிக்க முயல்வீர்கள். தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். கலை சார்ந்த அறிவுகள் மேம்படும். சுயதொழிலில் மேன்மையான சூழல் அமையும். அரசுவழியில் ஆதாயம் உண்டாகும். இறைவழிபாட்டில் மனம் ஈடுபடும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 9
அதிர்ஷ்ட நிறம் : பல வண்ண நிறங்கள்

 

மூலம் : கீர்த்தி உண்டாகும்.
பூராடம் : எண்ணங்கள் மேலோங்கும்.
உத்திராடம் : ஆதாயம் உண்டாகும்.

 

🔯மகரம் ராசி

 

உடல் ஆரோக்கியத்தில் கவனம் வேண்டும். வேலையில் பணிச்சுமை அதிகரிக்கும். புதிய முயற்சிகளில் எதிர்பார்த்த முடிவுகள் கிடைக்க காலதாமதமாகும். தொழில் அலைச்சல்களால் இலாபம் அடைவீர்கள். பல நாட்களாக இருந்துவந்த சிக்கல்களை அமைதியாக கையாண்டு முடிப்பீர்கள்.

 

அதிர்ஷ்ட திசை : கிழக்கு
அதிர்ஷ்ட எண் : 7
அதிர்ஷ்ட நிறம் : வெள்ளை நிறம்

 

உத்திராடம் : கவனம் வேண்டும்.
திருவோணம் : பொறுப்புகள் அதிகரிக்கும்.
அவிட்டம் : அமைதி வேண்டும்.

 

🔯கும்பம் ராசி

 

எதிர்பார்த்த உதவிகளால் சாதகமான சூழல் உண்டாகும். எதிர்பாராத தனவரவால் சேமிப்பு உயரும். மனைவியின் ஆதரவால் தனலாபம் உண்டாகும். பொன், பொருள்களின் சேர்க்கை உண்டாகும். கூட்டாளிகளிடம் ஏற்பட்ட விவாதங்களில் சாதகமான பலன்கள் உண்டாகும். வர்த்தக மேம்பாட்டிற்கான செயல்களில் நண்பர்களின் உதவிகள் கிடைக்கும்.

 

அதிர்ஷ்ட திசை : தெற்கு
அதிர்ஷ்ட எண் : 1
அதிர்ஷ்ட நிறம் : ஆரஞ்சு நிறம்

 

அவிட்டம் : சாதகமான நாள்.
சதயம் : சேமிப்பு உயரும்.
பூரட்டாதி : உதவிகள் கிடைக்கும்.

 

🔯மீனம் ராசி

 

தொழில் சார்ந்த எண்ணங்கள் மேலோங்கும். ஆன்மிக வழிபாட்டில் மனம் ஈடுபடும். கடனால் மன வருத்தங்கள் உண்டாகும். தாய்மாமன் உறவினர்களிடம் அமைதியாக நடந்து கொள்ளவும். மனைவியால் சுபவிரயங்கள் உண்டாகும். உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் நிதானத்துடன் நடந்து கொள்ளவும்.

 

அதிர்ஷ்ட திசை : மேற்கு
அதிர்ஷ்ட எண் : 3
அதிர்ஷ்ட நிறம் : அடர் மஞ்சள்

 

பூரட்டாதி : எண்ணங்கள் மேலோங்கும்
உத்திரட்டாதி : விரயங்கள் உண்டாகும்.
ரேவதி : நிதானம் வேண்டும்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon