--- --:--:-- --

புதிய அதிகாரி உண்மைகளை வெளிக்கொண்டு வர வேண்டும்

18

சிலை கடத்தல் வழக்கில் புதிய விசாரணை அதிகாரி முழு உண்மைகளையும் வெளிக் கொண்டுவர வேண்டும் என திமுக தலைவர் மு க ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

 

கடத்தல் தடுப்பு பிரிவு சிறப்பு அதிகாரி பொன் மாணிக்கவேல் வழக்கு தொடர்பான ஆவணங்களை ஒப்படைத்து இருக்கும் நிலையில் ஸ்டாலின் தனது முகநூல் பக்கத்தில் இவ்வாறு தெரிவித்துள்ளார். தமிழக கோவில்களில் சிலைகள் கடத்தப்பட்டது தொடர்பான வழக்கை விசாரித்து வந்த காவல்துறை அதிகாரி இந்த விவகாரத்தில் அதிமுக அமைச்சர்கள் குற்றம்சாட்டி இருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.

 

புதிய விசாரணை அதிகாரி அரசியல் அழுத்தம் எதற்கும் ஆட்பட்டு விடாமல் சிலை கடத்தல் வழக்கில் முழு உண்மைகளையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்துகொள்ளும் வகையில் விரைவில் வெளிக்கொண்டுவர வேண்டும் என ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார்.

📱 Share on WhatsApp 𝕏 Share on X

Leave a Reply

Right Menu Icon