2019 ஆம் ஆண்டிற்கான உலக அழகி பட்டத்தை ஜமைக்காவில் சேர்ந்த இளம்பெண் டோனி ஆன்சின் சென்றுள்ளார். இந்தியாவை சேர்ந்த சுமன் ராவ் மூன்றாம் இடம் பிடித்தார். உலக அழகி பட்டம் பெறுவது மாடலிங் துறையில் உள்ள ஒவ்வொரு பெண்ணின் கனவாகும்.
பெரும் போராட்டத்திற்கு மத்தியில் இந்த பட்டத்தை சூடி அழகு பார்த்து இருக்கிறார் ஜமைக்காவை சேர்ந்த 23 வயது இளம்பெண் டோனி ஆன்சின். 69-ஆவது உலக அழகி போட்டி இங்கிலாந்தின் லண்டனில் உள்ள மையத்தில் கடந்த நவம்பர் மாதம் தொடங்கியது.
இதில் 111 நாடுகளை சேர்ந்த அழகிகள் பங்கேற்றனர். இந்தியா சார்பில் ஃபெமினா மிஸ் இந்தியா போட்டியில் பட்டம் வென்ற ராஜஸ்தானை சேர்ந்த சுமன் ரத்தன் சிங் ராவ் பங்கேற்றார். பல்வேறு போட்டிகளுக்கும் 40 பெயர் வரிசை படுத்தப்பட்டனர். இறுதி சுற்று போட்டியில் அழகிகளின் அறிவுத்திறனை சோதிப்பதற்காக கேள்விகள் கேட்கப்பட்டன.
போட்டி முடிவில் உலக அழகியாக ஜமைக்காவில் சேர்ந்த டோனி ஆன்சின் 2019 ஆம் ஆண்டுக்கான அழகியாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இவருக்கு கடந்த ஆண்டு உலக அழகி பட்டம் வென்ற மெக்சிகோவை சேர்ந்த வனிஷா மகுடம் சூட்டினார்.
அமெரிக்காவின் புளோரிடா மாகாண பல்கலைக்கழக மாணவியான டோனி ஆன்சினிடம் உங்கள் வாழ்க்கையில் மிக முக்கியமான விஷயம் எது என்ற கேள்விக்கு தனது தாயாரை குறிப்பிட்ட அவர், தனது கனவுகளுக்கு ஆதரவளித்து தம்மை வெற்றியை நோக்கி நகர்த்தியதாக தெரிவித்திருந்தார். இந்த போட்டியில் பிரான்ஸின் மெஷிநோவும் இரண்டாவது இடத்தையும் இந்திய அழகி சுமன் ராவ் மூன்றாவது இடத்தையும் பிடித்தனர்.