உச்சத்தைத் தொட்டு வரும் வெங்காயத்தின் விலை நாட்டின் பல்வேறு பகுதிகளில் குறைந்து வருவதாகவும் விலையை கட்டுக்குள் வைப்பதற்காக வெளிநாடுகளில் இருந்து வெங்காயத்தை இறக்குமதி செய்து சந்தைக்கு அனுப்பி வைப்பதற்கான நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டதாகவும் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
டெல்லியில் செய்தியாளர்களை சந்தித்த அவர் வெங்காயத்தின் விலை கடுமையாக குறையவில்லை என்றாலும் ஓரளவுக்கு தற்போது குறைந்து இருப்பதாக கூறினார். வெங்காய விலையை கட்டுக்குள் கொண்டுவருவது பற்றி தினசரி அமைச்சர்கள் குழுவை கூட்டி விரிவாக ஆலோசிக்கப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறினார்.
மேலும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் பெய்த கன மழை மற்றும் வெள்ளம் காரணமாக வெங்காய விளைச்சல் குறைந்து விலை உயர்வு ஏற்பட்டதாகவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.