பிரிட்டனில் நடைபெற்ற நாடாளு மன்றத் தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சி அமோக வெற்றி பெற்றதைத் தொடர்ந்து பிரதமராக போரிஸ் ஜான்சன் மீண்டும் பதவியேற்கிறார்.
மீண்டும்ஐரோப்பிய நாடான, பிரிட்டனில் நேற்று நடந்த பொதுத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சனின் கட்சி 326 இடங்களுடன் பெரும்பான்மை பலம் பெற்றது. தோல்விக்கு பொறுப்பேற்று எதிர்க்கட்சி தலைவர் பதவியை ஜெரமி கார்பின் ராஜினாமா செய்தார்.
பிரிட்டனில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சியின் ஆட்சி நடைபெற்று வந்தது. ஐரோப்பிய கூட்டமைப்பின் இருந்து பிரிட்டன் விலகுவது தொடர்பாக போரிஸ் ஜான்சன் கொண்டு வந்த பிரெக்சிட் ஒப்பந்தத்திற்கு அந்நாட்டு நாடாளுமன்றத்தில் ஒருமித்த ஆதரவு கிடைக்கவில்லை.
ஐரோப்பியயூனியனில் இருந்து விலகும் முடிவுக்கு தோல்வி ஏற்பட்டதால் நாடாளுமன்றத்தை முன்கூட்டியே கலைக்கும் முடிவை எடுத்தார் பிரதமர் போரிஸ் ஜான்சன்.
இதையடுத்து 650 இடங்களைக் கொண்ட பிரிட்டன் நாடாளுமன்றத்திற்கு நேற்று தேர்தல் நடந்தது. இந்தத் தேர்தலில் பிரதமர் போரிஸ் ஜான்சன் தலைமையிலான கன்சர்வேடிவ் கட்சிக்கும், எதிர்க்கட்சித் தலைவராக உள்ள ஜெர்மி கார்பினின் தலைமையிலான தொழிலாளர் கட்சிக்கும் இடையே கடும் போட்டி நிலவியது. இந்தத்
தேர்தலில் ஆளும் கன்சர்வேடிவ் கட்சியே அமோக வெற்றி பெற்று, பிரதமர் போரிஸ் ஜான்சன் மீண்டும் ஆட்சியில் அமர்வார் என தேர்தலுக்கு முந்தைய கருத்துக் கணிப்புகள் தெரிவித்தன.
இந்நிலையில், நேற்று தேர்தல் முடிவடைந்த நிலையில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. இதில் 361 இடங்களை கைப்பற்றி கன்சர்வேடிவ் கட்சி மெஜாரிட்டி இடங்களில் வென்றது.
போரிஸ்ஜான்சன் மீண்டும் பிரதமர் பதவியில் அமர்கிறார். இம்முறை மெஜாரிட்டி இடங்களில் வெற்றி பெற்று போரிஸ் ஜான்சன் பிரதமராகியுள்லி தான், பிரெக்சிட் ஒப்பந்தம் நிறைவேறி, ஐரோப்பிய யூனியனில் இருந்து பிரிட்டன் விலகுவது உறுதியாகியுள்ளது.