மகளை கொன்று துண்டு துண்டாக்கி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தை

மாற்று சாதியை சேர்ந்த வரை காதலித்த மகளை கொன்று உடலை துண்டு துண்டாக்கி சூட்கேசில் எடுத்து சென்ற தந்தையை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

 

மும்பை கல்யாணி ரயில் நிலையத்திற்கு சென்று கொண்டிருந்தது. அந்த ஆட்டோவில் இருந்தவர் இரண்டு சூட் கேஸ்களை வைத்திருந்த நிலையில் அதிலிருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. கல்யாணி ரயில் நிலையத்தில் இறங்கியதும் ஒரு பெட்டியை வீசி எறிந்துவிட்டு மீண்டும் ஆட்டோவில் ஏறி இருக்கிறார் அந்த நபர்.

 

அதனால் சந்தேகம் அடைந்த ஆட்டோ ஓட்டுநர் இது தொடர்பாக காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். காவல்துறை விரைந்து வந்து இன்னொரு சூட்கேசை திறந்து பார்த்தபோது அதில் துண்டுதுண்டாக ஒரு பெண்ணின் சடலம் இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

 

அவரை கைது செய்து விசாரித்தபோது பல திடுக்கிடும் உண்மைகள் வெளிவந்துள்ளன. உத்தரபிரதேச மாநிலம் ஜாமூர்பூர் மாவட்டத்தை சேர்ந்த அரவிந்த் திவாரி. இவர் பணி காரணமாக தனது மகளுடன் மும்பையில் குடியேறியுள்ளார்.

 

பிரின்சி தான் பணி செய்யும் இடத்தில் வேற்று சாதி இளைஞர் ஒருவரை காதலித்துள்ளார். மகனின் காதலுக்கு எதிர்ப்பு தெரிவித்த திவாரி இது தொடர்பாக அவருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளார். ஆனால் காதலில் விட முடியாது என உறுதியாக தெரிவித்ததால் ஆத்திரமடைந்த திவாரி அவரை கொலை செய்துவிட்டு உடலை துண்டு துண்டாக வெட்டி இரண்டு சூட்கேசில் அடைத்து கல்யாணி ரயில் நிலையத்தில் வீசி எறிந்து உள்ளார்.

 

அந்த ரயில் நிலையத்தில் உள்ள சிசிடிவி காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு அந்த சூட்கேசில் கைப்பற்றியுள்ள காவல்துறையினர் இதுதொடர்பாக தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மாற்று சாதி இளைஞரை காதலித்தாள் என்ற ஒரே காரணத்திற்காக மகளை கொலை செய்துவிட்டு தானும் சிறைக்கு சென்று உள்ளார் தந்தை.


Leave a Reply