ஆதார் இல்லை என்றால் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் ?

ஆதார் அட்டை இல்லை என்றாலும் ரேஷன் கார்டுகளில் பெயர்களை நீக்க கூடாது என மாநில அரசுகளுக்கு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. மக்களவையில் பேசிய உணவு துறை மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை அமைச்சர் ராம் விலாஸ் பஸ்வான் ஆதார் கார்டு இணைக்கப்படவில்லை என்பதற்காக ரேஷன் பொருட்கள் வழங்குவதையும் நிறுத்தக் கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.

 

நாட்டில் உள்ள ஐந்து லட்சத்து 35 ஆயிரம் நியாயவிலை கடைகளில், ஆதார் எண்ணுடன் செயல்படும் 4 லட்சத்து 58 ஆயிரம் மின்னணு இயந்திரங்கள் இருப்பதாக ராம் விலாஸ் பஸ்வான் தெரிவித்துள்ளார்.


Leave a Reply