திருமணத்தை மீறிய உறவு…! ஆண், பெண் இருவருக்கும் தர்மஅடி கொடுத்த மக்கள்
மத்திய பிரதேசத்தில் திருமணமான பெண்ணுடன் தொடர்பு வைத்துக் கொண்ட திருமணமான இளைஞரை ஊர் மக்கள் மரத்தில் கட்டி வைத்து கடுமையாக தாக்கினர்.
பெண்ணும் ஊர்மக்கள் முன்னிலையில் தாக்கப்பட்டார். பிந்த் என்ற பகுதியில் திருமணமான இளைஞர் ஒருவர் வேறு பகுதியில் இருக்கும் திருமணமான பெண்ணின் வீட்டிற்கு இரவு நேரத்தில் வருவதை வாடிக்கையாகக் கொண்டிருந்தார்.
கணவர் இல்லாத நேரத்தில் அந்தப் பெண்ணும் இளைஞரும் தனியாக இருந்ததை அருகில் வசித்த பெண்ணின் மாமனார் கண்டுபிடித்தார். இந்நிலையில் ஊர் மக்கள் முன்னிலையில் அவர்கள் இருவரும் கடுமையாக தாக்கப்பட்டனர்.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




