நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்ய இருக்கும் குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டும் என்று மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இது தொடர்பாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றுள்ள அனைத்து தமிழக கட்சி தலைவர்களுக்கும் அவர் எழுதியிருக்கும் கடிதத்தில் குடியுரிமை சட்ட திருத்த மசோதா அரசமைப்புச் சட்டத்திற்கு விரோதமானது என குறிப்பிட்டிருக்கிறார்.
அதனால் இஸ்லாமியர்கள் மற்றும் இலங்கை தமிழர்களுக்கு பாரபட்சம் காட்டும் வகையில் உள்ள குடியுரிமை திருத்த மசோதாவிற்கு எதிராக தமிழக எம்பிக்கள் வாக்களிக்க வேண்டுமென்று ஜவாஹிருல்லா வேண்டுகோள் விடுத்துள்ளார்.