அடுத்த ஆண்டு முதல் அரசுப் பள்ளிகளில் செயற்கை நுண்ணறிவு பாடங்கள் அறிமுகம்
அரசு பள்ளிகளில் அடுத்த ஆண்டு முதல் செயற்கை நுண்ணறிவு பாடங்களை கற்றுக் கொடுக்க தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. ஆறாம் வகுப்பு முதல் ஒன்பதாம் வகுப்பு களில் இதுதொடர்பான பாடத்திட்டங்கள் சேர்க்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்படுகிறது. இதன் மூலம் இன்றைய நவீன தொழில்நுட்பங்கள் குறித்து மாணவர்கள் நன்கு அறிந்துகொள்ள இயலும் என கூறப்படுகிறது. சீனா, அர்ஜென்டினா, கென்யா போன்ற நாடுகளில் உள்ள பள்ளிகளிலும் செயற்கை நுண்ணறிவு மற்றும் ரோபோடிக்ஸ் பாடங்கள் அறிமுகப்படுத்தப்படுகின்றன.
📱 Share on WhatsApp 𝕏 Share on X




