ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை : சீமான்

ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என தெரியவில்லை என்றும் தாம் நாட்டிற்காக பேசி வருவதாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.

 

சென்னை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், இந்தியா போன்ற பெரிய நாட்டில் வெங்காயத்தை உற்பத்தி செய்ய முடியாதது அவமானமாக உள்ளதாக கூறினார். வெங்காயம் மற்றும் வெள்ளைபூண்டு உண்பதே இல்லை என்று மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பேசியதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும் என கேள்வி எழுப்பினார்.

சீமான் பேசுவது நாட்டிற்கு நல்லதல்ல என ராகவா லாரன்ஸ் கூறியது குறித்த கேள்விக்கு பதிலளித்த அவர் ராகவா லாரன்ஸ் கூறுவது எந்த நாட்டிற்கு என்று தெரியவில்லை என்றும் கூறினார்.


Leave a Reply