ஹைதி நாட்டில் தலைமறைவாகியுள்ளாரா நித்தியானந்தா?

நித்தியானந்தா தற்போது தங்கள் நாட்டில் இல்லை என ஈகுவடார் அரசு தெரிவித்துள்ளது. அவர் தங்கள் நாட்டில் தீவு வாங்கி இருப்பதாக வெளியான தகவலையும் அந்நாடு மறுத்துள்ளது. கைலாச தீவை தனி நாடாக மாற்றும் முயற்சியில் நித்தியானந்தா ஈடுபட்டிருப்பது தெரிந்த செய்திதான்.

 

அந்த தீவு எங்கே இருக்கிறது என்பதுதான் தற்போது எழுந்திருக்கும் கேள்வி. நித்யானந்தா தங்கள் நாட்டில் தீவு எதையும் வாங்கவில்லை என்றும், அவர் வேறு எங்கேனும் தீவு வாங்குவதற்கு தாங்கள் உதவி செய்யவில்லை என்றும் ஈகுவடார் அரசு தெரிவித்துள்ளது.

 

தஞ்சம் கோரி நித்யானந்தா விடுத்த வேண்டுகோளை நிராகரித்து விட்டதாக அந்நாட்டு அரசு கூறியுள்ளது. ஈகுவடாரிலிருந்து இருந்து வெளியேறிய நித்யானந்தா ஹைதி நாட்டிற்கு சென்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

எனவே ஹைதி நாட்டுக்கு அருகில் உள்ள தீவுகளில் ஏதேனும் ஒன்றை வாங்கி அங்கு நித்யானந்தா பதுங்கி இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. பல்வேறு வழக்குகளில் சிக்கியுள்ள நித்தியானந்தாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க குஜராத் மாநில காவல்துறை முடிவு செய்துள்ளது.

 

குற்றவழக்குகளில் தொடர்புடையவர்கள் தங்களுடைய அடையாளத்தையும் இருப்பிடத்தையும் வெளிப்படுத்த கோரி ப்ளூ கார்னர் நோட்டீசை நித்தியானந்தாவிற்கு வழங்க வேண்டும் என மாநில குற்றவியல் விசாரணை துறைக்கு அகமதாபாத் காவல்துறை அதிகாரிகள் கடிதம் எழுதியுள்ளனர்.

 

அதில் கடத்தல் மற்றும் சிறுமிகளை அடைத்து வைத்து சித்திரவதை செய்தல் போன்ற குற்றங்களுக்காக நித்யானந்தாவை தேடி வருவதாகவும் அவரின் இருப்பிடம் தெரியாத நிலையில் நோட்டீஸ் அளிக்க சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போலிடம் பெற்று தருமாறு கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

 

எல்லைகளைத் தாண்டிய நடவடிக்கைகளுக்காக சர்வதேச புலனாய்வு அமைப்பான இன்டர்போல் எட்டு வகையான நிறங்களில் நோட்டீசை பிறப்பிக்கும். நோட்டீஸ் அளிக்கப்பட்ட நபர் எந்த நாட்டில் இருந்தாலும் அவரை கண்டுபிடித்து சரணடைய வைத்து உரியவரிடம் ஒப்படைக்க பொறுப்பை இன்டர்போல் ஏற்க்கும்.

 

அந்தவகையில் நித்யானந்தாவிற்கு ப்ளூ கார்னர் நோட்டீஸ் அளிக்க மாநில குற்றவியல் விசாரணை அகமதாபாத் காவல்துறை உள்ளது.


Leave a Reply