ஹைதராபாத்தில் பெண் மருத்துவர் கொலை குற்றவாளிகள் 4 பேரும் சுட்டுக் கொலை செய்யப்பட்டதற்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு தெரிவித்துள்ளார். போலீசாரின் நடவடிக்கைக்கு தேமுதிக பொருளாளர் பிரேமலதா விஜயகாந்த் வரவேற்பு அளித்துள்ளார்.
தெலுங்கானா கூட்டு பாலியல் வன்கொடுமை வழக்கில் குற்றவாளிகளை என்கவுண்டரில் சுட்டுக் கொலை செய்யப்பட்டது தொடர்பாக தமிழகத்தில் உள்ள பல்வேறு மாணவ மாணவிகள் அதற்கு வரவேற்பு அளித்துள்ளனர்.
குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டர் செய்யப்பட்ட நிலையில் அந்த வழியாக பேருந்தில் சென்ற மாணவிகள் போலீசார் என்கவுண்டருக்கு வரவேற்று உற்சாக கூச்சலிட்டனர்.