பள்ளியில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம்

தூத்துக்குடி அருகே அரசு உதவி பெறும் பள்ளிகளில் ரசாயன பாட்டில்களை எடுத்து சென்ற போது தவறி விழுந்ததில் 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இச்சம்பவம் குறித்து விசாரணை நடத்த மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

தூத்துக்குடி மாவட்டம் இடையற்காட்டில் நாசரேத் திருமண்டலத்திற்க்கு சொந்தமான அரசு உதவி பெறும் பள்ளியில் நூற்றுக்கணக்கான மாணவர்கள் பயின்று வருகின்றனர். வேதியல் ஆய்வகத்தில் இருந்து ரசாயன கலவை பாட்டில்களை அகற்றும் பணியில் பள்ளி மாணவர்களை தலைமை ஆசிரியர்கள் ஈடுபடுத்தி உள்ளார்.

 

இதில் மாணவர்கள் கொண்டுசென்ற இராசாயன பாட்டில்கள் கீழே விழுந்ததில் வேல்ராஜ், மகாராஜன் உள்ளிட்ட 6 மாணவர்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அப்பகுதி தனியார் மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சை பெற்ற மாணவர்கள் மேல் சிகிச்சைக்காக அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 

இச்சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பள்ளி மாணவர்கள் காயமுற்ற சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்திட மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.

 

ஆபத்தான வேதியல் கலவைகளை அகற்றும் பணியில் மாணவர்களை ஈடுபடுத்தியது பெரிய தவறு எனவும் பள்ளி தாளாளரிடம் விளக்கம் கேட்கப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.


Leave a Reply