கத்தியை காட்டி மிரட்டி ரூ.55 லட்சம் வழிப்பறி

தலைவாசல் அருகே விவசாயியை பின்தொடர்ந்து சென்று கத்தியை காட்டி மிரட்டி 55 லட்சம் ரூபாயை பறித்து சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் தலைவாசல் அருகே உள்ள நாவக்குறிச்சியை சேர்ந்தவர் விவசாயி சின்னதுரை.

 

இவர் நிலம் வாங்குவதற்காக சென்னையில் உள்ள தமது உறவினரிடம் கடனாக 55 லட்சம் ரூபாயை பெற்றுக் கொண்டு சேலம் திரும்பியுள்ளார். அங்கு சேலம், சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சுங்கச் சாவடியில் நிறுத்திவைக்கப்பட்டிருந்த தமது மோட்டார் சைக்கிளை எடுத்துக் கொண்டு இன்று அதிகாலை அவர் நாவக்குறிச்சி நோக்கி சென்றுள்ளார்.

 

அப்போது அவரை 6 பேர் கொண்ட கும்பல் மோட்டார் சைக்கிளில் பின்தொடர்ந்து வந்து வழிமறித்து உள்ளனர். பின்னர் அவர்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை காட்டி மிரட்டி சின்னசாமியிடம் இருந்த பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து அளிக்கப்பட்ட புகாரின் படி தலைவாசல் போலீஸார் வழக்கு பதிவு செய்து வழிப்பறி செய்தவர்களை தேடி வருகின்றனர்.


Leave a Reply