அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை..! சிசிடிவி காட்சி

திருச்சி அரசு மருத்துவமனை மாடியிலிருந்து குதித்து நோயாளி தற்கொலை செய்துகொண்ட சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன. கல்லுக்குழி அருகே உள்ள முடுக்குபட்டி கிராமத்தைச் சேர்ந்த நாகராஜன், மீராபாய் தம்பதியின் மகன் கணேசமூர்த்தி. கோவையில் பணியாற்றி வந்தார்.

 

இந்நிலையில் கடந்த ஒரு மாதமாக காய்ச்சலால் பாதிக்கப்பட்டு இருந்த கணேஷ மூர்த்தி திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் உள்நோயாளியாக அனுமதிக்கப்பட்டார். அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு மஞ்சள் காமாலை இருப்பதை உறுதி செய்து சிகிச்சை அளித்து வந்தனர்.

 

மருத்துவமனையில் ஆறாவது தளத்தில் உள்ள உள்நோயாளிகள் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்த கணேசமூர்த்தி இன்று காலை திடீரென கீழே குதித்து தற்கொலை செய்துகொண்டார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

கணேசமூர்த்திக்கு முறையான சிகிச்சை அளிக்கப்பட்டு வந்ததாகவும், உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டு ஒரு சில தினங்களில் வீட்டிற்கு செல்லவிருந்த நிலையில் அவர் தற்கொலை செய்து கொண்டதாகவும் மருத்துவமனை தலைவர் வனிதா தெரிவித்துள்ளார்.


Leave a Reply