யோகாசனம் செய்தபடி இரண்டரை நிமிடங்களில் 55 நாட்டுக் கொடியை கண்டு பிடித்ததோடு 8 திருக்குறளை ஒப்புவித்து தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த 3 வயது குழந்தை பிரகதீஸ்ரீ அசத்தியுள்ளார்.
தர்மபுரி மாவட்டம் மொரப்பூர் பகுதியை சேர்ந்த மணிகண்டன், அனிதா தம்பதியின் குழந்தையான பிரகதீஸ்ரீ ஒரு வயது முதல் யோகாசனத்தை கற்று வருகிறார்.
யோகா செய்வதோடு மேலும் ஏதாவது பயிற்சியை மேற்கொள்ள வேண்டும் என எண்ணிய குழந்தையின் பெற்றோர் யோகாசனம் செய்யும் போதே பல்வேறு பயிற்சிகள் அளித்ததோடு திருக்குறள் ஒப்பிப்பதை கற்றுக் கொடுத்தனர்.
தீவிர பயிற்சியின் மூலம் இரண்டு நிமிடம் 22 வினாடிகளில் கொடிகளை பார்த்து 55 நாடுகளின் பெயரை கூறியதோடு திருக்குறளை வைத்து குழந்தை பிரகதிஸ்ரீ ஒப்புவித்தது சாதனை படைத்துள்ளது. மேலும் குழந்தையின் திறமையை பாராட்டி இந்தியா புக் ஆப் ரெக்கார்ட்ஸ் அமைப்பு சான்றிதழ் வழங்கியுள்ளது.