உலக கோடீஸ்வரர்கள் பட்டியல்: 9வது இடத்தில் முகேஷ் அம்பானி

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிட்டிருக்கும் உலக முதல் 10 கோடீஸ்வரர்கள் பட்டியலில் இந்தியாவை சேர்ந்த முகேஷ் அம்பானிக்கு ஒன்பதாவது இடம் கிடைத்துள்ளது. சர்வதேச அளவில் பிரபலமாக திகழும் போர்ப்ஸ் பத்திரிக்கை ஆண்டுதோறும் கோடீஸ்வரர்களின் பட்டியலை வெளியிட்டு வருகிறது.

 

அந்த வகையில் 2019 ஆம் ஆண்டுக்கான உலகின் 10 கோடீஸ்வரர்களின் பட்டியலை அந்த பத்திரிக்கை தற்போது வெளியிட்டுள்ளது. இப்பட்டியலில் அமேசான் நிறுவனரும் அதன் தலைமை செயல் அதிகாரியுமான ஜபென்ஸ்ஸ் முதலிடத்தில் உள்ளார்.

 

இவருடைய நிகர சொத்து மதிப்பு 11,300 கோடி டாலராகும் .இந்திய மதிப்பில் சுமார் 7.91 ஒரு லட்சம் கோடி ரூபாய் ஆகும். இவருக்கு அடுத்தபடியாக பில்கேட்ஸ் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளார். எல்‌வி‌எம்‌எச் நிறுவனர் பெர்னாட் அர்னால்டு மூன்றாவது இடத்தில் உள்ளார்.

 

இவர்களை தொடர்ந்து இந்தியாவைச் சேர்ந்த ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் தலைவர் முகேஷ் அம்பானி 6000 கோடி டாலர் சொத்து மதிப்புடன் ஒன்பதாவது இடத்தைப் பிடித்துள்ளார்.

 

இந்திய மதிப்பில் சுமார் 4.20 லட்சம் கோடியாகும். அண்மையில் அவருடைய நிறுவனப் பங்குகளின் சந்தை மதிப்பு வர்த்தகத்தில் 10 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் அதிகரித்து சாதனை படைத்தது.


Leave a Reply