மறைந்த நடிகர் பாலாசிங்கின் வாழ்க்கை வரலாறு

நடிகர் நாசரின் இயக்கத்தில் வெளிவந்த அவதாரம் திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானவர் மேடை நாடகக் கலைஞரான பாலாசிங். இந்தியன், சிம்ம ராசி, ராசி, விருமாண்டி என பல திரைப்படங்களில் பாலாசிங் முத்திரை பதித்தவர்.

 

ஏராளமான திரைப்படங்களில் நடித்திருந்தாலும் பாலாசிங் பரிச்சயமாக மாற்றிய திரைப்படம் புதுப்பேட்டை. அந்த திரைப்படத்தில் அவரது அன்பு கதாபாத்திரம் மிகுந்த வரவேற்ப்பை பெற்றது. வில்லன், குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து வந்த பாலாசிங் சமீபத்தில் வெளிவந்த சூர்யாவின் என் ஜி கே படத்திலும், ஆர்யாவின் மகாமுனி படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.

 

வெள்ளித்திரை மட்டுமின்றி சின்னத்திரை தொடர்களிலும் நடித்துள்ளார். 67 வயதான பாலாசிங் கடந்த சில நாட்களாக கடுமையான காய்ச்சல் மற்றும் மூச்சுத் திணறலால் பாதிக்கப்பட்டிருந்தார்.

 

சென்னை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். சொந்த ஊரான கன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் உடலுக்கு இறுதி சடங்குகள் நடைபெற்றது.


Leave a Reply