கன்னியாகுமரியில் பொதுமக்கள் முன்னிலையில் 2 பேரை காவல்துறையினர் தாக்கும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளது. வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் இருசக்கர வாகனத்தில் வந்த சகாய வால்டர் மற்றும் ஜோசப் ரவீந்திரன் ஆகியோரை தடுத்து நிறுத்தியதாக தெரிகிறது.
அப்போது இருதரப்புக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அதனை தொடர்ந்து சகாய வால்டரையும் ஜோசப் ரவீந்திரனையும் தாக்கிய காவல்துறையினர் அவர்களை வேனில் அழைத்துச் சென்றனர்.
இதனை அங்கிருந்து ஒருவர் வீடியோ எடுத்துள்ளார் இது குறித்து காவல்துறையினரிடம் கேட்டபோது மதுபோதையில் சகாய வால்டர் மற்றும் ஜோசப் ரவீந்திரன் காவலர்களை தாக்க முயன்றதாகவும் அதன் காரணமாகவே அவர்களை வேனில் ஏற்றி அழைத்து சென்றதாகவும் தெரிவித்தனர்.