இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரை நிறவெறியுடன் வசைபாடிய நியூசிலாந்து ரசிகர்

இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ஆர்ச்சரை நியூசிலாந்து ரசிகர் ஒருவர் திட்டியதற்கு அந்த அணியின் கேப்டன் வில்லியம்சன் மன்னிப்புக் கோரியுள்ளார்.

 

ஆக்லாந்தில் நடைபெற்ற இங்கிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் போது இங்கிலாந்து வீரர் ஆர்ச்சரை ரசிகர் ஒருவர் நிறவெறியுடன் வசைபாடியதாக அவர் டிவிட்டரில் புகார் தெரிவித்திருந்தார்.

 

இந்த விவகாரம் கிரிக்கெட் உலகில் புயலை கிளப்பியது. இதற்கு நியூசிலாந்து கேப்டன் வில்லியம்சன் மன்னிப்பு கோரியுள்ளார். நியூசிலாந்து பல கலாச்சாரம் கொண்ட நாடு எனவும் இதுபோன்ற சம்பவங்கள் எதுவும் இனி நிகழாது என தாம் நம்புவதாகவும் வில்லியம்சன் தெரிவித்துள்ளார்.


Leave a Reply