பழுதான பாலத்தின் ஓட்டை வழியாக நுழைந்து மறுபக்கம் வந்த இளைஞர்

நாகையில் பழுதடைந்த பாலத்தில் ஓட்டையின் உள்ளே நுழைந்து மறுபக்கம் வெளியே வரும் இளைஞரின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது. நாகப்பட்டினம் நகராட்சிக்கு உட்பட்ட அக்கரை குளம் பழமைவாய்ந்த தேவநதி பாலம் பல ஆண்டுகளாக சேதமடைந்து காணப்படுகிறது.

 

இந்த நிலையில் மழை காரணமாக பாலத்தின் நடுவே ஆள்துளை கிணறு போன்று பெரிய ஓட்டை விழுந்துள்ளது. இதுகுறித்து பலமுறை புகார் அளித்தும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்கவில்லை என குற்றம் சாட்டிய இளைஞர்கள் பொதுமக்களின் ஆபத்தான நிலையை அதிகாரிகளுக்கு உணர்த்தும் வகையில் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

 

அதிகாரிகள் விரைந்து சீரமைக்கவில்லையெனில் பொதுமக்கள் ஒன்றிணைந்து பாலத்தை இடிக்கப் போவதாகவும் எச்சரிக்கை விடுத்துள்ளனர். இந்த வீடியோ காட்சி தற்போது சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.


Leave a Reply